எந்த ஒரு புதிய செயலை செய்ய விரும்பினாலும் நாம் முதலில் செய்ய வேண்டியவை
1. அச்செயலை நாம் எதற்காக செய்ய வேண்டும்? WHY?
2. அதனால் என்ன பயன்? SO WHAT?
3. யாருக்கு லாபம்? FOR WHOM?
இக்கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் மட்டும் அப்புதிய முயற்சியில் ஈடுபட வேண்டும் .
1. அச்செயலின் அடிப்படை என்ன? என்பதை ஆராய வேண்டும்.
2. உன் மனதிற்கு சரி அல்லது தவறு எனப்பட்டதைப் பிரித்துப் பார்த்து உன் வழிமுறைகளை நீயே உருவாக்கு.
3. பின் அம்முயற்சியில் வெற்றி பெற்றவர்களிடம் நிறைகுறைகளைக் கேட்டு உன் வழிமுறைகளை உனக்கேற்றாற்போல் வடிவமைத்துக்கொள்.
வெற்றிபெற்றவர்களின் பாதை அவர்கள் தனக்காக தனக்கேற்றார் போல் அமைத்தது. அது மற்ற அனைவர்க்கும் பொருந்தாது. ஒன்றைத் தவிர – முயற்சி….
இந்த அண்டசராசரமும் உனக்குள் அடக்கம். உனக்கு நீயே கடவுள். உனக்குள் இருக்கும் கடவுளிடம் உனக்கு வேண்டியவற்றைக் கேள். உன்னை நீயே நம்பு. உன்னை மட்டுமே நம்பு.
மனதில் உறுதி கொள்….
நிச்சயம் முயற்சி வெற்றியடையும்…