Skip to content
Home » செல்வந்தன்

செல்வந்தன்

செல்வம் பெற்றிருந்தால் மட்டும் செல்வந்தனாகிவிட முடியாது. அந்த செல்வத்தை பிறர்க்கு நன்மை விளைவிக்கும் படி செலவழிக்க தெரிந்தவனே செல்வந்தன். பல நூறு கோடி சொத்து படைத்தவன் ஏழை எளியவர்க்கு உதவினால் தன் செல்வம் குன்றுமோ என அஞ்சி உதவ மறுத்தால் அவன் செல்வந்தன் என்னும் தகுதியை இழந்து கஞ்சன் / கருமி எனப்படுவான். 

வீதியில் பழம் விற்கும் கிழவி ௧௦ ரூபாய்க்கு ஒரு வாழை சீப்பு விற்று; கண்ணில் படும் எளியவர்க்கு ஒரு பழத்தைக் கொடுத்து பசியாற்றும் போது அந்த ஏழை கிழவி செல்வம் படைத்தவளாகிறாள். 

தனக்கு வேண்டியவற்றை எடுத்து வைத்துக்கொண்டு மிஞ்சியவற்றை கொடுப்பவனைவிட தன்னிடம் இருப்பவற்றை பகிர்ந்து கொடுப்பவனே செல்வன். 

தன்னை அண்டிப்பிழைப்போர்க்கு காவலனாய் திகழ்பவனே செல்வந்தன். அவன் கடவுள்  நிலையை அடைவான். காக்கும் தொழில் செய்யும் விஷ்ணு பகவானிடம் வாசம் செய்யும் திருமகள் போல எவர் ஒருவர் பிறருக்கு உதவும் மனம் பெற்றிருக்கின்றாரோ அவரிடம் சகல செல்வமும் செழிக்கும். 

பணம் படைத்தவன் அல்ல 

மனம் படைத்தவனே செல்வந்தன்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *