பதில்களை விட கேள்வியே சிறந்தது. ஏன்னெனில் கேள்வியே ஒரு மனிதனை அடுத்தநிலை சிந்தனைக்கு அழைத்துச் செல்லும்.
அப்படிப்பட்ட கேள்வி எப்படி இருக்க வேண்டும்? நாம் கேட்கும் கேள்வி தேவையற்றதாகவும் அர்த்தமற்றதாகவும், அதற்கு பதில் நம்மிடமே இருக்கும் பட்சத்தில் கேள்வி அதன் பயனை இழக்கிறது. (இடம், பொருள் , ஏவல்).
தேவையற்ற கேள்வி அதன் மதிப்பை இழக்கிறது. அர்த்தமற்ற கேள்வி முட்டாள்தனத்தைக் குறிக்கிறது. ஒரு கேள்வியைக் கேட்கும் போது அதற்கு நம்மிடம் பதிலை தேட வேண்டும். தெளிந்த மனதோடு சிந்திக்கும் போது நம்மிடமே பதில் இருக்கும், அல்லது பதில் கிடைப்பதற்கான வழி கிட்டும். அப்படி நமக்குள் பதில் கிடைக்காத பட்சத்தில் அதைப்பற்றி அறிந்த ஆன்றோர்களிடம் வினவலாம்.
பதில் அறிந்த கேள்விகளை எப்போது எதற்காக கேட்கலாம்? ஒவ்வொரு தனிமனிதனின் கண்ணோட்டத்தை அறிந்துகொள்ள, ஒருவரின் திறன் அறிந்துகொள்ள அவ்வாறான கேள்விகளை கேட்கலாம்.
எவன் ஒருவன் தன் கேள்விகளுக்கு தன்னுள் விடை தேடுகிறானோ அவன் ஞானத்தை அடைவான்.