Skip to content
Home » அர்த்தமுள்ள இந்து மதம்

அர்த்தமுள்ள இந்து மதம்

மனிதனால் மனித வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டுதல் அல்லது ஒரு பிடிமானமாக உருவாக்கப்பட்டதே மதம். நம் இந்து மதத்தில் மனிதனுக்கு தன்னம்பிக்கை , புத்துணர்ச்சி, சக்தி என அனைத்தையும் வழிபாடுவாயிலாக நம் முன்னோர்கள் அருளினர். ஒவ்வொரு ஆற்றலிற்கும் ஒரு கடவுளின் பிம்பத்தை உருவாக்கினார். 

(எ.கா) கல்வி- சரஸ்வதி 

படைப்பவர் – பிரம்மா 

செல்வம் – திருமகள் 

காப்பவர் – விஷ்ணு 

வீரம் – சக்தி 

முத்தொழில் புரிபவர்  – சிவன்

கல்வி அறிவு பெற்றிருந்தால் உன்னால் ஒரு படைப்பை உருவாக்க முடியும். பிறருக்கு உதவும் (காக்கும்) ஆற்றல் பெற்றிருந்தால் அவனுக்கு செல்வம் செழிக்கும். மனதில்  தைரியம் இருந்தால் முத்தொழிலும் கைவசப்படும். 

சூரியன் , வருணன் – இன்றியமையா இயற்கையின் சக்தியை கடவுளாக்கினர். 

எமன் – இறப்பின் புரிதல்,

சனி – கர்மவினைப்பயன் ,

காலி- பெண்ணின் கோபம், 

இராமன் – அரசனின் நெறி, 

கிருஷ்ணன்- சாதுர்யம்,தர்மம், 

முருகன் – வெற்றிக்காக பிறப்பெடுத்தவன், 

அனுமன்- உடலிலும் மனதிலும் வலிமை பொருந்தியவன் ( உருவம் பொருட்டல்ல). இதற்கு சான்று  யானை முகத்தோனுக்கு மூசக வாகனன். 

எந்த தருணத்தில் எந்த ஆற்றல் தேவைபடுகிறதோ அந்த கடவுளை மனதில் நிலைநிறுத்தி அந்த ஆற்றலுக்கு தன்னையே சமர்ப்பித்தால்…

வெற்றிக்குண்டான முயற்சி இருந்தால்…

நினைத்த காரியம் நடக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *