ஒருவர் கூறும் வார்த்தை அல்லது செய்யும் செயலினால் உண்டாகும் விளைவே கர்மவினை பயன். ஒருவன் துரோகம் செய்து வாழ்வில் செல்வந்தனாக உயர்ந்திருக்கலாம்; ஆனால் அவன் வாழ்நாள் முழுவதும் தான் துரோகம் செய்தது போல் யாரேனும் தனுக்கு துரோகம் இழப்பாரோ என எண்ணி பயந்து, வாழ்வின் மகிழ்ச்சி குன்றும். துரியோதனன் பார்வையில் அனைவரும் கெட்டவர்களாகவே தென்பட்டனர் அது போல. ஒருவருக்கு கெடுதல் செய்தால் அதனால் பாதிப்படைந்தவர்கள் மனதில் வன்மம் உண்டாகலாம். அதன் காரணமாக தீங்கிழைத்தவர்க்கு தக்க தண்டனை கிட்டலாம். அதுவே கர்மவினையின் பயன். என்ன தவறு செய்தோம் என்று தெரியாமல் செய்த தவறை திருத்திக்கொள்ளாமல் இருப்பவருக்கு கர்மவினை பயனே முக்தி அளிக்கும். எவர் ஒருவர் தன் தவறை புரிந்துகொண்டு அதை திருத்திக்கொள்கிறானோ அவன் கர்மவினையிலிருந்து விடுபடுவார். அவ்வாறு புரிந்துகொள்ளும்வரை கர்மவினை பயன் – மனசாட்சி, துரோகம், ஏமாற்றம், நஷ்டம், எதிர்பாரா கஷ்டம், வெவ்வேறு முகம் கொண்டு துரத்திக்கொண்டே இருக்கும்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்….
நல்லதையே நினை, நல்லதையே செய்….
நன்மை உண்டாகும்….