மிகச் சிறந்த செயல் உதவி.
ஆனால் அவ்வுதவி எப்போது மேன்மையடைகிறது?
தக்க தருணத்தில் தக்க நபருக்கு கிடைக்குமெனில் அவ்வுதவி மேன்மை பெரும்.
உதவி பெறுபவர் யார்?
1. சமய சந்தர்பங்களினால் தேவைப்படும் உதவி (எதிர்பாராமல் முதல்முறை) தேவைப்படுவோர். அதே உதவியை எதிர்பார்த்து அடுத்தமுறையும் எந்தவித முயற்சியும் செய்யாமல் சோம்பேறிகளாய் இருப்போரை ஒதுக்க வேண்டும்.
2. எந்தவித பயனையும் எதிர்பாராமல் நமக்கு உதவியவர்க்கு தக்க சமயத்தில் அவர் கேட்காமலே முன்னின்று உதவவேண்டும்.
3. உதவும் பொழுது தனக்கும் எந்தவித பாதிப்புமின்றி உதவி பெறுபவருக்கும் பாதிப்புமின்றி (சங்கடம் இன்றி) ஆராய்ந்து உதவுபவர்களிடம் இந்த பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் .
4. உதவ மனமில்லாமல் உதவுவது போல் நடிப்பவரிடம் சற்று விலகி நிற்க வேண்டும்.
தக்க தருணம் எது?
யாராக இருந்தாலும் மனம் வருந்தி, நிர்கதியாய் நிற்போர்க்கு உதவி செய்பவனே கடவுள்…