யார் மனதையும் புண்படுத்தாது உண்மை நிலையை ஆராய்ந்து கூறும் நேர்மையான கருத்தே விமர்சனம் ஆகும். அப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். ஆயிரம் பேர் பாராட்டினாலும் யார் உண்மை நிலையை கூறுகிறாரே அவரின் கூற்றை கவனிக்க வேண்டும். அதுவே நம்மை மேம்படுத்தும்.
விமர்சனங்கள் ஒருவரை மேம்படுத்தவும் உதவும் காயப்படுத்தவும் செய்யும். அவ்விமர்சனங்கள் யாரிடம் இருந்து? எதற்காக? என்ன காரணத்திற்காக? வருகிறது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது நம்மை முன்னேற்றப் பாதையில் இட்டு செல்லும் விமர்சனமாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இல்லையேல் அதன்மேல் கவனம் செலுத்தாதீர். அது காலவிரயத்தையே தரும். பயன் ஒன்றும் இல்லை.
குறைகளை கூட அழகுற சொல்லமுடியுமெனில் வாள்கொண்டு வீசி வெட்டியெறிவதேனோ ?
நிறைகளை கூறி வாழ்த்திய பின் குறைகளை சுட்டி காட்டி நம்பிக்கை கொடுத்தால் சிறு விதையானது துளிர் விட்டு நாளை விருக்ஷமாகும். மட்டம் தட்டினால் செழித்த சோலை கூட பாலையாகும்.
விமர்சனங்கள் தவறில்லை, வரவேற்கப்பட வேண்டியவை….
ஆனால் விமர்சிக்கும் முறையை பற்றி சற்று ஆலோசிக்கலாம்….