வணக்கம்…
என் அறிவு, ஆற்றல், திறன், சிந்தனை அனைத்திற்கும் அடித்தளமிட்டவர் என் ஆத்ம நண்பனான என்னுயிர் அப்பா…
அவர் என்னை விட்டு பிரிந்தாலும் அவர் என்னுள் தூண்டிய சிந்தனைகளும், அவர் கூறிய அறிவுரைகளும் என்னை வழிநடத்தும்….
என்னுள் தூவப்பட்ட விதைகளை துளிர்விடச் செய்வதே என் எண்ணம்.
எனக்குள் தோன்றும் கேள்விகளையும் அவற்றை ஆராயும் போது கிடையும் பதில்களையும் பதிவு செய்ய விரும்பினேன்.
அதை அனைவரிடமும் பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன். அதற்கான ஆரம்பமே இது…
இந்த பதிப்பில் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களையே பகிர்ந்துள்ளேன்.
பிடித்தவர்கள் ஆமோதியுங்கள்…
மற்றவர்கள் புரிந்துகொள்ள முயற்சியுங்கள்….
அன்பு மகள்
சிந்துஜா முத்துச்சாமி