Skip to content

MAZHALAI TALENT EVENT - MAY 2025

அன்புள்ள பெற்றோர்களே,

உங்கள் குழந்தையின் முயற்சிகளை வளர்க்கும் நோக்கில் நீங்கள் அளிக்கும் ஆதரவும் அர்ப்பணிப்பும் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் தளத்தின் நோக்கம், குழந்தைகளின் திறமைகளை வளர்த்தெழுப்புவது என்பதாலாக, அவர்கள் தாங்களாகவே பணிகளை முடிக்க உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • போட்டியின் உற்சாகம் நமக்குத் தெரியும். இருப்பினும், வெற்றியைவிட பங்கேற்பே முக்கியமானது என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும். வெற்றிபெறும் சிலர் மட்டுமல்ல, மற்ற பங்கேற்பாளர்களுக்கும் ஊக்கத்தின் அடையாளமாக சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.
  • போட்டி முடிவுகள் குறித்து உங்களின் புரிதலையும் ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறோம். இப்போட்டி நேர்மையுடன் நடத்தப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. எந்தவிதமான விவாதம் அல்லது வாதமும் ஏற்கப்படமாட்டாது. வெற்றிபெற்ற படைப்புகள் முடிவுகள் அறிவிக்கும் போது வெளியிடப்படும்.
  • முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், பரிசுகள் ஒரு மாதத்துக்குள் அனுப்பப்படும்.
  • பதிவு செய்யும் போது, குழந்தையின் பெயர், வயது, முழுமையான முகவரி (அஞ்சல் குறியீடு உட்பட), மற்றும் சரியான தொடர்பு எண்ணை மிகத் துல்லியமாக உள்ளிடவும்.
  • பதிவு செய்தவுடன் ஒரு நாளுக்குள் வாட்ஸ்அப்பில் உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படும்.

உங்கள் புரிதலுக்கும், ஆதரவுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்!

வாழ்த்துகள்,
பொன்துகல் கலைக்கூடம்
கரூர், தமிழ்நாடு

பரிசுகள் குறித்த முக்கிய தகவல்கள்:

🎖 முதல் மூன்று பரிசுகள்
மாணவரின் பெயர் மற்றும் விவரங்கள் இடம்பெறும் வெற்றிக் கேடகம் (Shield), பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

🖼 மற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும்
தமிழ் தொடர்புடைய ஓவியம் பொறிக்கப்பட்ட அலங்கார அட்டை (DIY pre-marked MDF board), குழம்பி (Paint) மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

📌 வெற்றியாளர்கள் எண்ணிக்கை
வெற்றி இடங்கள் போட்டியாளர்களின் எண்ணிக்கை மற்றும் போட்டியின் தீவிரத்தை பொறுத்து தீர்மானிக்கப்படும்.

📦 பரிசுகள் அனுப்பும் முறை
பரிசுகள் அனைத்தும் பதிவு செய்த முகவரிக்கு தனியார் அஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.

📲 அஞ்சல் தகவல் பகிர்வு
அஞ்சல் அனுப்பும் விவரங்கள், பதிவு செய்த மாணவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரிவிக்கப்படும்.

📝 பதிவுகள் தொடர்பான விவரம்
ஒரே மாணவர் எத்தனை போட்டிகளிலும் பங்கேற்கலாம். ஆனால் ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனி பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள்:

  • சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்: மே 18, 2025
  • முடிவுகள் அறிவிப்பு: ஜூன் 8, 2025
  • பரிசுகள் அனுப்பும் தேதி: ஜூலை 8, 2025
 

பதிவு கட்டணம்: ரூ.250/- (ஒவ்வொரு போட்டிக்கும், அஞ்சல் கட்டணம் உட்பட)

GPay எண்:📱 90479 24287

தொடர்பு கொள்ள: 📞 90479 24287 / 63691 19816

EVENT DETAILS:-

1.தமிழ் எழுது (TAMIL HANDWRITING): –  Click Here For Other Details
2.நா பிறழ் (TONGUE   TWISTER):- Click Here For Other Details
3.தமிழ் பேசு (Speech/Rhymes) :- Click Here For Other Details
4.தமிழ் பாடு ( Singing – தத்துவ பாடல்கள்):- Click Here For Other Details
5.சுழி கோலம் (Kolam):- Click Here For Other Details
6.ஓவியம் தீட்டு (Drawing) :-Click Here For Other Details
7.வண்ணம் பூசு (Colouring) :- Click Here For More Details