யாருடைய துணையும் இன்றி சுயமாக எழுந்து நிற்கும் எந்தவொரு மனிதருக்கும் சுய மரியாதையின் பொருள் விளங்கும். தனக்குத் தானே அங்கீகாரம் கொடுத்துக் கொல்வதே சுய மரியாதை.
எப்போதும் கர்வத்துடன் இரு. இங்கு யாரும் யாருக்கும் சலைத்தவர் இல்லை.
சுய மரியாதை உடையவரையே இந்த சமூகம் மரியாதையுடன் நடத்தும். நமக்கு நாமே மதிப்பளிக்கவில்லையெனில் பிறர் எப்படி மதிப்பளிப்பார் . இதில் குறிப்பாக குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் பெண்கள் தங்கள் மதிப்பை உணர்வதே இல்லை.
எளியோர் என எண்ணி அவர் சுய மரியாதையை சீண்டினால் அவர் மனதில் வைராக்கியம் உண்டாகுமெனில் எளியோர் வெகுண்டு வலியோர் ஆகும் நாள் வெகுதூரம் இல்லை. அப்போது வலிமை படைத்தவன் எனும் கர்வம் உடைந்து தன மதிப்பையும் இழக்க நேரிடும்.
தன திறன், ஆற்றல், உடைமை மீது கர்வம் இருக்கலாம். அதை தனக்குள் வைத்து தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். எளியோர் மீது அகங்காரமாய் வெளிப்படுத்தினால் அது அழிவைத் தரும்.
அங்கீகாரத்தை பிறரிடம் தேடாதே….
உன்னுள் விதைத்து பிறரிடம் படர விடு…..