தெய்வ வழிபாடு எப்படி செய்வது?
என்ன வேண்டிக் கொள்வது? எப்படி வேண்டுவது? விளக்கு ஏற்ற வேண்டுமா? விழுந்து கும்பிட வேண்டுமா? திருநீறு அணிய வேண்டுமா? வரம் கேட்க வேண்டுமா? நன்றி சொல்ல வேண்டுமா? அந்த ௨ நிமிடம் கடவுள் முன்பு நின்று மனதில் என்ன நினைத்து வேண்டுவது?
பெரும்பாலனோர் செல்வம், கல்வி, உடல்நலம் போன்றவற்றை குடு இறைவா என்று கேட்பார். அதை பெறுவதற்கு தாங்கள் தகுதியுடையவர்களா என ஆராய்ந்துபாராமல்….
எவன் ஒருவன் தான் வேண்டும் வரம் கிடைக்க தன்னை தகுதியுடையவனாக மாற்றிக்கொள்கிறானோ அவனுக்கே வரம் கிடைக்கும்.
இந்த வரம் கிடைக்க நான் தகுதியுடையவனாக மாற எனக்கு இந்த சக்தியை (ஆற்றலை) கொடு இறைவா என்றே வேண்டிக்கொள்ள வேண்டும் .
நாள்தோறும் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் மந்திரம் தான் வழிபாடு. மனதார நாம் நினைக்கும் செயல் / எண்ணம் வெற்றியடைவதற்கான வழிகளைச் செயல்படுத்த நம்மை உந்தும். கடவுள் ஒவொருவரின் மனதிலும் நிறைதிருக்கிறார்.
தினம்தினம் உங்கள் மனதிடம் வேண்டுங்கள்;
உங்களை தகுதியானவர்லாய் மாற்றுங்கள்;
நினைத்த வரம் கிடைக்கும்….