என்னை பொறுத்தமட்டில் கோபம் ஒரு சிறந்த ஆற்றல். சரியான கோபத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் நன்மை பயக்கும். கோபத்தைப் பற்றி சிந்திக்கும்போது இரண்டு கேள்விகள் என் மனதுக்குள் எழுந்தன.
எதற்காக? எப்படி?
- எதற்காக ?
தீமையை எதிர்த்து நியாயத்திற்காக வெகுண்டால் அது ரௌத்திரம்.
மற்றவை அனைத்தும் தன்னிலை மறந்த வெறும் சினம். அதனால் பயனொன்றும் இல்லை.
- எப்படி ?
கோபத்தை வெளிக்காட்டுவது எப்படி?
கோபத்தின் காரணம் சரியானதாக இருக்குமாயின் அக்கோபத்தின் ஆற்றலை வைராக்கியமாக மாற்றவேண்டும். மனதில் உறுதி இருக்குமெனில் கோபத்தின் ஆற்றலினால் நன்மை பயக்கும். அதைவிடுத்து வசைபாடினாலோ தீங்கு நினைத்தாலோ நஷ்டமே உண்டாகும்.
கோபத்திற்கும் மதிப்பு உண்டு….
அதன் மதிப்பை கூடுவதும் குறைப்பதும் நம் கையில்….
கோபம் வரும்போது இந்த இரண்டு கேள்விகளை மனதுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள்.
சரியானதாக இருந்தால் சாதனையாளர் ஆவீர்கள்…
கோபம் கொள்ளலாம் தவறொன்றும் இல்லை….